சிகரெட்டைவிட ஆபத்தானது! புற்றுநோயை ஏற்படுத்தும் உப்பு!!  – உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்

 

சிகரெட்டைவிட ஆபத்தானது! புற்றுநோயை ஏற்படுத்தும் உப்பு!!  – உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்

உணவில் அதிக உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உணவில் அதிக உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

” உப்பில்லா பண்டம் குப்பையிலே ” என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. உலகில் உப்பின்றி சமைக்கப்படும் உணவென்று எதுவும் இல்லை. அப்படி சமைக்கப்பட்டாலும் அது சுவைபெறாது. உப்பு சிறிது குறைவாக இருந்தாலும் மேலும் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் இன்றும் உள்ளனர். 

salt

இந்நிலையில் சிகரெட் எப்படி புற்றுநோயை உண்டாக்குமோ அதேபோல் உப்பும் புற்றுநோயை உருவாக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும் சிகரெட் பாக்கெட்டுகளில் புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற வாசகங்கள் இடம்பெறுவது போன்று, உப்பு பாக்கெட்டிலும், அதிக உப்பு ஆபத்து என்ற எச்சரிக்கை வாசகங்களை அச்சுறுத்த உப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  உப்பு பாக்கெட்டுகளில் குறிப்பிட்ட உணவு வகைகளை பட்டியலிட்டு எவ்வளவு உப்பு அளவை சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிட அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த  2017 ஆண்டில் மட்டும் உப்பை அதிகம் சாப்பிட்டதற்காக உலகம் முழுவதிலும் 30 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளப்படும் உப்பு, அப்படி என்ன செய்துவிடும் என அசால்ட்டாக இருந்துவிடக்கூடாது. உப்பு உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதால் வயிற்று புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.