சிகரெட்டுக்கு எதிர்ப்பு: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் கழுத்தை நெரித்து கொலை

 

சிகரெட்டுக்கு எதிர்ப்பு: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் கழுத்தை நெரித்து கொலை

சிகரெட் பிடித்ததை தட்டிக் கேட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் ஓடும் ரயிலில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாட்னா: சிகரெட் பிடித்ததை தட்டிக் கேட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் ஓடும் ரயிலில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புகையிலை காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது உயிரை இழக்கிறார்கள். விலைமதிப்பற்ற இந்த உயிர் இழப்பிற்கு எதிராக இந்தியா பல கோடி ரூபாய் செலவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். எனினும், “புகை உடல் நலத்திற்கு கேடு”  என எத்தனை முறை சொன்னாலும் புகைப்பிடிக்கும் பழக்கம் இன்றளவும் ஓயவில்லை.

இந்நிலையில், சிகரெட் பிடித்ததை தட்டிக் கேட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் ஓடும் ரயிலில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் – பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஜாலியன்வாலா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி பெண் ஷீனத்தேவி என்பவர் பயணித்துள்ளார். இதே ரயிலில் சோனு யாதவ் என்பவரும் பயணித்துள்ளார். அப்போது, சக பயணியான சோனு சிகெரெட் பிடித்துள்ளதாக தெரிகிறது. இதனை ஷீனத்தேவி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோனு, ஷீனத்தேவியை தாக்கியதுடன் அவரது கழுத்தையும் நெரித்துள்ளார்.

இச்சம்பவத்தால் ரயில் நிறுத்தப்பட்டு, காயமடைந்த ஷீனத்தேவி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சோனு கைது செய்யப்பட்டுள்ளார்.