சிஏஏ: ரூ. 1 கோடி பரிசு என்று பா.ஜ.க போஸ்டர்… எப்போ தருவீர்கள் என்று ஆதாரத்துடன் திரியும் நெட்டிசன்கள்!

 

சிஏஏ: ரூ. 1 கோடி பரிசு என்று பா.ஜ.க போஸ்டர்… எப்போ தருவீர்கள் என்று ஆதாரத்துடன் திரியும் நெட்டிசன்கள்!

குடியரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று பா.ஜ.க கூறி வருகிறது. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவு உள்ளிட்டவை வரும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் காட்டி இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று எதிர்த் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர் என்று ஒருவரை ஆதாரத்துடன் காட்டினால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பா.ஜ.க-வினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட இந்து குடும்பங்களின் பட்டியலைக் கொடுத்து பணத்தைத் தரும்படி நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

caa-protest-87

குடியரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று பா.ஜ.க கூறி வருகிறது. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவு உள்ளிட்டவை வரும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் காட்டி இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று எதிர்த் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு எல்லாம் பதில் அளிக்காமல் திசை திரும்பு வேலையை பா.ஜ.க-வினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு கோடி சவால் என்று பா.ஜ.க-வினர் நூதன பிரசாரத்தைத் தொடங்கினார்கள். அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர் என்று ஒருவரை ஆதாரத்துடன் காட்டினால் அவருக்கு ஒரு கோடி பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதை யார் வழங்குவார், கட்சித் தலைமை வழங்குமா என்ற விவரங்கள் ஏதும் அதில் குறிப்பிடவில்லை.

1-crore-change

இந்த நிலையில் அஸ்ஸாமில் சிஏஏ, என்.ஆர்.சி-யால் பாதிக்கப்பட்ட இந்துக்களின் குடும்பங்களின் பட்டியல், குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருதின் அலி அகமது குடும்பத்தினர் பற்றிய செய்தி, ராணுவ வீரர் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட செய்திகளை எல்லாம் எடுத்து அவர்களுக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அந்த நூதன பிரசாரம் பெரிய அளவில் செல்லவில்லை.
இந்த நிலையில் அதே ஒரு கோடி சவாலை போஸ்டராக அடித்து தமிழகத்தின் பல பகுதிகளில் பா.ஜ.க-வினர் ஒட்டி வருகின்றனர். யார் வந்து நம்மிடம் கேட்டுவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த பதிவுகள் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.