சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற பிரபல இயக்குநர் உள்பட 1300 பேர் மீது வழக்கு! – திருச்சி போலீஸ் அதிரடி

 

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற பிரபல இயக்குநர் உள்பட 1300 பேர் மீது வழக்கு! – திருச்சி போலீஸ் அதிரடி

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பின்பற்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. திருச்சியில் நடந்த எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற பிரபல இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற, ஆதரவு தெரிவித்த 1300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பின்பற்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. திருச்சியில் நடந்த எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற பிரபல இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

trichy-shaheen-bagh

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இஸ்லாமியர்கள் 16வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகாரம் சார்பில் அஞ்சாதே போராடு என்கிற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்த அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன், திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தற்போது இவர்கள் அனைவர் மீதும் திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி தில்லை நகர் 80 அடி சாலையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செழியன் உள்ளிட்ட 50 பேர் மீதும், டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் போராட்டம் நடத்திய திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் மாணவர் சங்க நிர்வாகி சுரேஷ், பிரதீப் உள்பட 250 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடினார்கள் என்பதற்காகவே 1300 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.