சிஏஏவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது : முதல்வர் திட்டவட்டம்

 

சிஏஏவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது : முதல்வர் திட்டவட்டம்

குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இதுவரை எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட வில்லை. அப்படி ஒரு சிறுபான்மையினர் பாதிக்கப் பட்டிருந்தால் சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் அளிக்கிறோம்

இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், குடியுரிமை சட்டத்திருத்தத்தால் சிறுபான்மையின மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் குடியுரிமைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பின் தமிழகத்தில் மட்டும் நிறைவேற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

ttn

அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இதுவரை எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட வில்லை. அப்படி ஒரு சிறுபான்மையினர் பாதிக்கப் பட்டிருந்தால் சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் அளிக்கிறோம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று கூறிய அவர், மாநில அரசால் எதுவும் செய்ய முடியாது என்றும் தவறான தகவல்களால் தான் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் கூறினார். மேலும், இந்த சட்டத்திருத்தத்தால் சிறுபான்மையினருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்தார்.