சிஏஏக்கு எதிராக 2,05,66,082 கையெழுத்து படிவங்கள்… டெல்லிக்கு அனுப்பி வைப்பு!

 

சிஏஏக்கு எதிராக 2,05,66,082 கையெழுத்து படிவங்கள்… டெல்லிக்கு அனுப்பி வைப்பு!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தோழமை கட்சிகளுடன் இணைந்து ஏற்கனவே கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் படி, கடந்த 2 ஆம் தேதி கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தார். 

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தம் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தைக் கிளப்பியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், அரசியல் அமைப்புகள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த போராட்டத்தின் போது டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தோழமை கட்சிகளுடன் இணைந்து ஏற்கனவே கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் படி, கடந்த 2 ஆம் தேதி கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தார். 

ttn

இந்த இயக்கத்தில்  திமுகவின் தோழமை கட்சித் தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த இயக்கத்தை நடத்தினர். கடந்த 8 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துகள் அனைத்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் பெறப்பட்ட அனைத்து கையெழுத்துகளும் டெல்லிக்கு இன்று அனுப்பப்பட்டது. அந்த அனைத்து படிவங்களும் வரும் 19 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் 2,05,66,082 படிவங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.