சாலை விதிகளை மீறிய முதலமைச்சர் – 400 ரூபாய் அபராதம்

 

சாலை விதிகளை மீறிய முதலமைச்சர் – 400 ரூபாய் அபராதம்

கர்நாடக முதல்வருக்கு சாலை விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சொந்த வாகனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இரண்டு முறை சாலைப் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அபாரதத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.

சாலை விதி மீறல் 

கர்நாடக மாநில முதல்வரான குமாரசாமி தன் சொந்தப் பயன்பாட்டிற்கு SUV ரக காரை பயன்படுத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 10 – ஆம் தேதி கைபேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக இந்த வாகனத்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

பின்னர் பிப்ரவரி 22 – ஆம் தேதி மிதமிஞ்சிய வேகத்தில் சென்றமைக்காக 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப் பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரசீது வாகனம் பதிவு செய்யப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் கட்டணம் செலுத்தப்படவில்லை .

சாலை விதி

முதல்வர் குமாரசாமி எப்போதும் தன் சொந்த வாகனத்தையே பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அலுவலகப் பயன்பாட்டிற்கு கூட அவர் அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.