சாலையில் காட்டாற்று வெள்ளம்: ஒரு நாள் மழைக்கு மூழ்கிய சென்னை புறநகர் பகுதிகள்! 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி காலை வரை மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல சாலைகள் வெள்ளக்காடாக மிதக்கின்றன.
சென்னை புறநகர் பகுதிகளில் மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டன. சாலைகளில் காட்டாற்று வெள்ளம் போல தண்ணீர் புறண்டு ஓடுகிறது. குறிப்பாக தாம்பரம், மணிமங்கலம், முடிச்சூர், சேலையூர், மேடவாக்கம், வேளச்சேரி பிரதான சாலை என பல பகுதிகளில் சாலைகள் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் இடுப்பு அளவுக்கு கூட தண்ணீர் தேங்கியது.

flood

குறிப்பாக சேலையூர் பாரத் பல்கலைக் கழகம் தாண்டி மப்பேடு சிக்னல் செல்லும் வழியில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. வடகிழக்கு பருவ காலம் விரைவில் முடிய உள்ள சூழலில் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர்.

ஆனால், ஒரே நாள் இரவு மழைக்கு எல்லாம் ஊரே முக்கிவிட்டது. கடந்த ஆண்டு சரியான மழை இல்லை. தண்ணீரை சேகரிக்க ஏரி குளங்களை தூர்வாரி, தண்ணீர் வந்து சேர வாய்க்கால் வசதியை சரியாக அமைத்திருந்தால் இதுபோன்று தண்ணீர் வீணாவதை தடுத்திருக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.