சார்மிளாவின் சவுக்கடி -“கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வந்தால் கஷ்டப்படுவதாக அர்த்தமா ?”-வசதியாகத்தான் வாழ்கிறேன்..

சார்மிளாவின் சவுக்கடி -“கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வந்தால் கஷ்டப்படுவதாக அர்த்தமா ?”-வசதியாகத்தான் வாழ்கிறேன்..

சில நாட்களுக்கு முன்பு நடிகை சார்மிளா மிகவும் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதாகவும், அதனால் முதுகெலும்பு சிகிச்சைக்காக ஆதரவின்றி அரசுஆஸ்பத்திரிக்கு வந்ததாகவும் சில மீடியாக்களில் வந்த செய்திகளை பற்றி சார்மிளா மனம் திறக்கிறார்.

“நான் சினிமாவில் பிஸியாக இருந்த பொழுது மாடியிலிருந்து கீழே விழுந்து முதுகெலும்பில் அடிபட்டு அப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்தேன். ஆனால் அவ்வப்பொழுது அங்கு வலி வந்து கொண்டிருப்பதால் அரசாங்க மருத்துவமனையில் இதற்கு சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதால் நான் இங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்தேன். மேலும் நான் தைராய்டு நோய்க்கு மாத்திரைகள் தொடர்ந்து பல ஆண்டாக சாப்பிட்டதால் ஏற்பட்ட வலி இது என்பதால் டாக்டர்கள் மாத்திரையை நிறுத்த சொல்லிவிட்டார்கள். எனது தந்தை அவரின் இறுதிக்காலத்தில் கீழ் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டதால் அவரின் நினைவாகவும், மேலும் என்னை தனியார் மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள உறவினர் உதவி செய்ய முடியாததால் தான் அரசு மருத்துவமனையை நாடியதாக கூறினார்.
மேலும் அவர் தன்னோடு வயதான தாயும், 11 வயது மகனும் இருப்பதாகவும் ,நடிகர் சங்கம் கொடுத்த மருத்துவ காப்பீடு அட்டை தன்னிடம் இருப்பதாகவும் அதனால்,தான் வசதியாகத்தான் வாழ்வதாகவும்  8 படங்களுக்கு மேல் நடித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.