சாரல் மழையுடன் துவங்கியது  குற்றால சீசன்… ‘ஜ்ஜில்’னு அனுபவிக்கணும்னா இப்பவே கிளம்புங்க…

 

சாரல் மழையுடன் துவங்கியது  குற்றால சீசன்… ‘ஜ்ஜில்’னு அனுபவிக்கணும்னா இப்பவே கிளம்புங்க…

குற்றாலம் ஐந்தருவியில் மட்டுமே தண்ணீர் வந்துக் கொண்டிருந்த நிலையில், கேரளவில் தென்மேற்கு பருவ நிலை தொடங்கி உள்ளதால், தற்போது மெயின் அருவியிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கி, குற்றால சீசன் களைக் கட்டத் துவங்கியிருக்கிறது. வழக்கமாக ஜூன் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் குற்றாலத்தில் சீசன் காலமாகும்.

குற்றாலம் ஐந்தருவியில் மட்

kuttralam

டுமே தண்ணீர் வந்துக் கொண்டிருந்த நிலையில், கேரளவில் தென்மேற்கு பருவ நிலை தொடங்கி உள்ளதால், தற்போது மெயின் அருவியிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கி, குற்றால சீசன் களைக் கட்டத் துவங்கியிருக்கிறது. வழக்கமாக ஜூன் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் குற்றாலத்தில் சீசன் காலமாகும். தற்போது, ஐந்தருவியிலும், மெயின் அருவியிலும் தண்ணீர்  அதிகமாக விழத் துவங்கியுள்ளதை அறிந்து  ஏராளமானோர் குற்றாலத்திற்கு வந்து குளித்தனர்.

kuttralam

இதே போல் பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் விழ தொடங்கியுள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவ மழைத் துவங்கியதும், குற்றாலத்தில் துவங்கும் சீசன், ஆகஸ்ட் மாதம் வரையில் நீடிக்கும். தற்போது, குற்றால சீசன் களைக் கட்டத் துவங்கியிருப்பதால், மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதுடன் குளிர்ந்த காற்றும் வீசி தட்பவெப்பநிலையை குளுகுளுவென வைத்திருப்பதால், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

kuttralam

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான அச்சன் புதூர், வடகரை, பண்பொழி, இடைகால், இலத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை தூறியபடி இருப்பதால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியது. குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி இருக்கிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியுள்ளது.
ஐந்தருவியில் ஆண்கள் குளிக்க கூடிய பகுதியில் உள்ள இரு கிளைகளில் இன்று காலை முதல் தண்ணீர் விழுகிறது. இதனால் தண்ணீர் விழும் பகுதியில் பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.