சாயிபாபா பிறந்த ஊர் சீரடி அல்ல! புதிய சர்ச்சையில் பக்தர்கள்!

சாயிபாபா பிறந்த ஊர் சீரடி அல்ல! புதிய சர்ச்சையில் பக்தர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் தான் சாய்பாபாவின் உலகப்புகழ் பெற்ற கோவில் இருக்கிறது. ஆனால் பர்கானி மாவட்டத்தில் இருக்கும் பத்திரி தான் அவர் பிறந்த ஊர் என்று இப்போது ஒரு பரபரப்பு கிளம்பி இருக்கிறது. அதை உறுதி செய்யும் விதமாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அந்த  நகரின் அடிப்படை கட்டுமான வளர்ச்சிப் பணிகளுக்காக 100 கோடிரூபாய் ஒதுக்கினார்.

uddhac

பத்திரி நகர்தான் சாய்பாபாவின் உண்மையான ஜென்மபூமி. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்கூட இதைச் சொல்லி இருக்கிறார். இங்கேதான் சாய்பாபா பிறந்தார் என்பதை நிரூபிக்க பல்வேறு சான்றுகள் உள்ளன.ஷீரடி சாய்பாபாவின் கர்ம பூமி,பத்திரி அவரது ஜென்மபூமி, இரண்டுமே பக்தர்களுக்கு முக்கியமானவை தான் என்று,தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ துரானி அப்துல்லாகான் சொல்லி இருக்கிறார்.

dhurani

மேலும் அவர் கூறுகையில்,பத்திரி வளர்ச்சி அடைந்தால்,ஷீரடியின் முக்கியத்துவம் பாதிக்கப்படும் என அந்த ஊர் மக்கள் கருதுகிறார்கள்.சாய்பாபா பக்தர்கள் பத்திரிக்கும் வரவேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கருதுகிறார். அதற்காகத்தான் 100 கோடிரூபாய் ஒதுக்கி இருக்கிறார். இதனால் ஷீரடி மக்கள் அஞ்சத் தேவயில்லை.அவர்களுக்கு எந்த விதமான நிதிப்பஞ்சமும் வராது,எதிர் காலத்தில் இரண்டு ஊர்களுமே வளற்சி அடையும் என்று தெரிவித்தார்.

puttaparthi

இதற்கிடையே நாளை (19ம் தேதிமுதல்) ஷீரடி சாய்பாபா கோவில் நடை சாத்தப்படும் என்றும்,அதனால் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என்கிற குழப்பமான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.