சாம்சங் மற்றும் எல்ஜி  அறிமுகப்படுத்தும் புது ஃபிரிட்ஜ்! அசரடிக்கும் அம்சங்கள்…! வாவ்.!!

சாம்சங் மற்றும் எல்ஜி  அறிமுகப்படுத்தும் புது ஃபிரிட்ஜ்! அசரடிக்கும் அம்சங்கள்…! வாவ்.!!

எலெக்ரானிக்ஸ்துறையில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சங்,எல்.ஜி நிறுவனங்கள் நாம் அன்றாடம் பயன் படுத்தக்கூடிய ஏகப்பட்ட ஐட்டங்களை பொருள்களை தயாரித்து வழங்குகிறார்கள் என்பதை புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஆனால் ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள பொருள்களில் புது அப்டேட் வெர்சனை வெளிடுவதுண்டு. அந்த வரிசையில் அடுத்த வாரம் லாஸ் வெகாஸில் நடைபெறவிருக்கும் ‘CES 2020’ கண்காட்சியில் இந்த 2 முன்னணி நிறுவங்களின் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படவிருக்கிறது. அது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

ces

இதன் சிறப்பம்சங்கள் உங்களுக்காக;

சாம்சங், ‘பேமிலி ஹப் ஸ்மார்ட் பிரிட்ஜ்’ என்ற ஃபிரிட்ஜை 2016-ம் ஆண்டு மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இது உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் ஃபிரிட்ஜில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய அனுமதிக்கும் வகையில் இன்னர் கேமராக்களைக் கொண்டுள்ளது.

refrigerator

மேலும் தற்போது வரவிருக்கிற ஃபிரிட்ஜ்ஜில் கூடுதல் வசதிகளைச் சேர்த்திருக்கிறார்கள்.இதில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிசென்ஸ் வசதி உள்ளது. அதனால் என்ன பிரயோயாசனம் என்று கேட்கிறீங்களா..? ரொம்ப சிம்பிள் நீங்கள் வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது கூட உங்கள் ஃபிரிட்ஜில் என்னென்ன பொருளெல்லாம் இருக்கு என்று உங்கள் மொபைல் வழியாகவே பார்க்க முடியும்!

தவிர,உள்ளே இருக்கும் பழங்கள்,காய்கறிகள்,பால் தொடங்கி என்னவெல்லாம் இருக்கோ அது எவ்வளவு இருக்கு என்றும்,வைத்து தீர்ந்து போன பொருள்கள் எது என்பதுவரை உங்களுக்கு பட்டியல் போட்டு காட்டும்.ஏற்கனவே இருக்கிற பொருள்களை தவிர்த்து உங்களுக்கு தேவையானதை மட்டும் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிகொண்டு போகலாம்.

family

இந்த நவீன ஃபிரிட்ஜ் கதவின் முன்புறத்தில் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் வசதியும் இருக்கு.சமையல் அறையில் வேலை பார்த்தபடியே அதில் நீங்கள் வீடியோக்களைப் பார்க்கலாம்.அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் பேசலாம்.இவ்வளவு ஏன்… உங்கள் வீட்டு காலிங் பெல் அடித்தாலும் இருந்த இடத்திலிருந்தே வந்திருப்பார் யார் என்று கூட பார்க்க முடியும்.

fridge

இதேபோன்று LG நிறுவனத்தின் பிரிட்ஜூம் வெளியில் இருந்தே என்னென்ன பொருட்கள் உள்ளே இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஒரு 22 இன்ச்  ட்ரான்ஸ்பரென்ட் டிஷ்பிளே வைத்திருக்கிறார்கள்.ஆர்டிஃபிஷியல் இண்டெலிசென்ஸ் வசதிதியுடன் கூடிய  இன்ஸ்டா வியூ ThinQ பிரிட்ஜ்,இது குறித்து LG நிறுவனத்தின் டேன் சோங் கூறியதாவது,”LG இன்ஸ்டாவியூ குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிசென்ஸ் வசதியுடன், நாளைய சமையலறைகளில் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதைக் காண்பிப்பதே CES 2020-ல் நடக்கவிருக்கிற கண்காட்சியின் நோக்கம்.

fridge

சமையலறையில் உதவும் நோக்கோடு இருக்கும் எங்கள் ThinQ பிரிட்ஜ்கள் இரவு உணவைத் திட்டமிடவும், ஷாப்பிங் பட்டியல்களை உருவாக்கவும் கூடிய அற்புதமான இயந்திரங்களாக மாற்றுவதால் எங்கள் வாடிக்கையாளர்களுக்காகவே வடிவமைக்கபட்டுள்ளன”என்று கூறினார்.

girl

ஆர்டிஃபிஷியல் இண்டெலிசென்ஸ் தொழில்நுட்பம் பலரையும் ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங்,LG நிறுவனங்களின் பிரிட்ஜ்களின் விலை இப்போதைக்கு எவ்வளவு என்று தெரியவில்லை!  வரும் 7-ம் தேதி தான் இந்த பிரமாண்டமான ஸ்மார்ட் AI பிரிட்ஜ்களின் விலை என்னவென்று தெரியவரும்.

இவ்வளவு வசதிகள் உள்ள ஃபிரிட்ஜ் என்றால் சும்மாவா..? என்ன விலையா இருந்தாலும் வாங்குறோம்…