சாம்சங் ”கேலக்ஸி நோட் 10 சீரிஸ்” ஸ்மார்ட்போன் அறிமுகம்!

 

சாம்சங் ”கேலக்ஸி நோட் 10 சீரிஸ்” ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Galaxy Note 10 ‌மற்றும் Galaxy Note 10 Plus ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரே மாதிரியான தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ‌

சாம்சங் ”கேலக்ஸி நோட் 10 சீரிஸ்” ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் 5ஜி‌‌ தொழில்நுட்‌‌பத்துடன் கூடிய Galaxy Note 10 ‌மற்றும் Galaxy Note 10 Plus ஆகிய இரு ஸ்மார்ட்போன்க‌‌ளை நியூயார்க்கின் புரூக்ளினில் நடைபெற்ற நி‌கழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.  

Galaxy Note 10 ‌மற்றும் Galaxy Note 10 Plus ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரே மாதிரியான தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ‌Galaxy Note 10 6‌.3 இன்ச் டிஸ்பிளேவுடனும், Galaxy Note 10‌ Plus 6‌.8 இன்ச் டிஸ்பிளே ‌மற்றும் முழு எச்டி ரெசல்யூஷனில்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாடல்களும் 5 ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியவை. 

கேலக்ஸி நோட் 10 ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி‌ எக்ஸ்டர்னல் சேமிப்பு கொண்டதாகவும்,‌‌12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எக்ஸ்டர்னல் சேமிப்பு கொண்‌டதாகவும் இரு வகைகளில் வெளிவரவுள்ளன. இதேபோல் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட் போனானது, 12 ஜிபி ரேம் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதிகளையும் பெற்றுள்ளது. 

Superfast Charging தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களுக்கு S-Pen என்ற சென்சார் பேனாக்க‌ள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஸ்மார்ட்போனிலுள்ள கேமரா உள்ளிட்ட பல செயலிகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க‌லாம். உதாரணமாக‌ போனை தொடாமலேயே‌ செல்பி எடுக்கலாம்.

 

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன், இரண்டு 12‌‌ மெகா பிக்சல் மற்றும் 16 மெகாபிக்சல் என மொத்தம் 3 பின்புற சென்சார் கேமராக்களுடனும்,  10 மெகாபிக்சல் செல்பி கேமராக்களுடனும் களமிறங்குகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட்  10 பிளஸ் கூடுதல் 3D Tof லென்ஸ் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு‌ள்ளது. மேலும் இளைஞர்களை கவர்வதற்காகவே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக்,  இரட்டை சிம் கார்டு, 3,500 மற்றும்‌ 4,300 எம்ஏஎச் பேட்டரி‌ ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.‌

Samsung Galaxy Note 10 ஸ்மார்ட்போனின் விலை 6‌7 ஆயிரமாகவும், Note 10 Plus 78 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போ‌னகளும் இந்தியாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.‌