‘சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6’ சாதனத்தின் லைட் வெர்ஷன் விரைவில் அறிமுகம்

 

‘சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6’ சாதனத்தின் லைட் வெர்ஷன் விரைவில் அறிமுகம்

‘சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6’ சாதனத்தின் லைட் வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சியோல்: ‘சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தின் லைட் வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் கூடிய விரைவில் லைட் டேப் சாதனத்தை வெளியிட உள்ளது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட பிளாக்ஷிப் டேப் ‘சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தின் லைட் வெர்ஷனை சாம்சங் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது. வடிவமைப்பில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் எஸ்-பென் இதனுடன் வழங்கப்படும். மேலும் இந்த லைட் வெர்ஷனில் வயர்லெஸ் சார்ஜிங் போர்ட் அளிக்கப்படுமா என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை.

இந்த லைட் வெர்ஷன் சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களாக 8.4 இன்ச் டிஸ்பிளே, எக்சைனோஸ் 9611 பிராசசர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி அல்லது 128 ஜிபி மெமரி ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ‘சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6’ சாதனத்துடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் விலை குறைவாகும்.