சாப்பிடும்போது செல்போனை தொடாமலிருந்தால் பீட்சா இலவசம்!

சாப்பிடும்போது செல்போனை தொடாமலிருந்தால் பீட்சா இலவசம்!

அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உண்ணும்போது செல்போன்களை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, இலவச பீட்சா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உண்ணும்போது செல்போன்களை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, இலவச பீட்சா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கலிபோர்னியாவில், தி கரி என்ற பெயரில் இயங்கிவரும் அந்த பீட்சா நிறுவனம், சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடுபவருக்கு பீட்சா இலவசம் என தெரிவித்துள்ளது. ஏன் இந்த அதிரடி அறிவிப்பு என கேட்டால் பீட்சா சாப்பிட வருபவர்கள், உடன் வருபவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அந்த நேரத்தில் செல்போனை தவிர்க்க வேண்டுமாம். அதற்காகதான் இந்த புதிய அஃபர் என்கிறது தி கரி நிறுவனம். குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட குழுவாக வந்து செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடும் பட்சத்தில் இலவச பீட்சாவை பெற முடியும். அந்த நேரத்திலேயே இலவச பீட்சாவை சாப்பிட முடியவில்லை என்றல் அடுத்தமுறை உணவகத்திற்கு வரும்போது வாங்கி உண்ணலாம்.