சாதிவெறி பேச்சுக்காக 5 நாள் கெடு… வரப்போகிறது பா. ரஞ்சித்துக்கு மாபெரும் கேடு..!

 

சாதிவெறி பேச்சுக்காக 5 நாள் கெடு… வரப்போகிறது பா. ரஞ்சித்துக்கு மாபெரும் கேடு..!

மாமன்னர் ராஜராஜ சோழனை பற்றி பேசி பலரது சாபங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகிறார் பா.ரஞ்சித். 

மைக் கிடைத்தால் வாயில் வந்ததை உளறிக் கொட்டி தான் பேசுவதை புரட்சியாகவும், தத்துவமாகவும் உணர்ந்து தறி கெட்டு சாதி வெறியை விதைத்து வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அவரது அநாகரிக உளறல்கள் அவ்வப்போது சர்ச்சையாகி விடுகிறது. அந்த வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனை பற்றி பேசி பலரது சாபங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகிறார் பா.ரஞ்சித். 

அவர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. இதனால் பயந்துபோன ரஞ்சித் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும் ராஜாராஜ சோழன் தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளம்.

ranjith

சோழர்களுக்கு கொடுத்து தான் பழக்கம் யாருடைய வாழ்வையும் கெடுத்து பழக்கமில்லை, அதற்கான ஆதாரங்கள் பல கல்வெட்டுகளில் உள்ளது என்று தமிழக அரசு வாதிட்டது.

ஆனாலும் பா.ரஞ்சித் ’’தான் எந்த அவதூறையும் பரப்பவில்லை ஜாதி மோதலை தூண்டவில்லை. வரலாற்றில் உள்ளதை தான் பேசினேன். எனது பேச்சு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது’’ எனறு ரஞ்சித் தரப்பு  வாதிட்டார்.

rajaraja chola

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘’ உள்ளதை பேசினால் எந்த தவறும் செய்யவில்லை என்றால் முன் ஜாமீன் கோருவதன் காரணம் என்ன? ஒரு ஜாதியினரின் கைதட்டலை பெற மற்றொரு ஜாதியினரை இழிவாக அவதூறு பேசுவதா..? 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது பேசுவது எதற்காக? ராஜராஜசோழன் எந்த சாதியை சேர்ந்தவர் என்று யாருக்கும் தெரியாது. அவரை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? எனக் கூறி வழக்கை வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ராஜமாணிக்கம்.

மேலும் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இந்த வழக்கை கவனித்த சட்ட வல்லுநர்கள்பா.ரஞ்சித்திற்கு முன் ஜாமீன் கிடைப்பது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித்திற்கு ஜாமீன் கிடைக்காமல் கைது செய்தால்தான் பலரும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் இன்னும் ஐந்தே நாட்களில் இதுவரை சிறை செல்லாத பா.ரஞ்சித் கம்பி எண்ணப்போவது உறுதி என்கிறார்கள்.