சாண்டியை அலேக்காக தூக்கிய நடிகர் சிம்பு: வைரல் வீடியோ!

 

சாண்டியை  அலேக்காக தூக்கிய நடிகர் சிம்பு: வைரல் வீடியோ!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்துள்ள சாண்டி  நடிகர் சிம்புவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். 

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்துள்ள சாண்டி  நடிகர் சிம்புவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். 

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நான்கு  போட்டியாளர்கள் தொட்டநிலையில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல மக்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார்.

sandy

ஒருமுறை மகத் யாஷிகா வருகையின் போது  மகத், சிம்பு எல்லாரையும் கேட்டேன்னு சொல்ல சொன்னாரு என்று கூறிவிட்டு சாண்டி  உன்கிட்ட தான் முக்கியமா சொல்ல சொன்னாரு என்று கூறினார். சாண்டிக்கு  ஏற்கனவே சிம்பு பரிட்சியமானவர் என்பதால் அப்போது அது பெரிதாக தெரியவில்லை.

 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் சாண்டி சிம்புவை சந்திக்கச் சென்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.அதில், சிம்பு சாண்டியை  கட்டியணைத்துக் கொள்கிறார். பிறகு சாண்டியை  தூக்கி  வைத்து கொண்டாடுகிறார். அப்போது தர்ஷனும் உடனிருக்கிறார். இந்த வீடியோவானது  தற்போது வைரலாகி வருகிறது.