‘சாண்டா… எனக்கு ஒரு நல்ல அப்பா தர முடியுமா?’.. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு 7 வயது சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம் !

 

‘சாண்டா… எனக்கு ஒரு நல்ல அப்பா தர முடியுமா?’..  கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு 7 வயது சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம் !

கிறிஸ்துமஸ் நெருங்குவதால் அனைத்து குழந்தைகளும் சாண்டாவிடம் எனக்கு இது வேணும்.. அது வேணும் என்று கேட்பது வழக்கம் தானே.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களைத் தாங்கும் முகாம் ஒன்று உள்ளது. அந்த முகாமில் 7 வயது சிறுவன் பிளேக் இருந்து வருகிறான். கிறிஸ்துமஸ் நெருங்குவதால் அனைத்து குழந்தைகளும் சாண்டாவிடம் எனக்கு இது வேணும்.. அது வேணும் என்று கேட்பது வழக்கம் தானே. அதே போல, பிளேக் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான்.

ttn

 அந்த கடிதத்தில், ” அன்புள்ள சாண்டா,  என் அப்பா மிகவும் மோசமானவர். என் அப்பாவுக்குத் தேவையான அனைத்தும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், நானும் என் அம்மாவும் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அப்போது அம்மா, நாம் வெளியே போக வேண்டிய நேரம் இது. நான் உன்னைப் பத்திரமான இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார். நான் எந்த குழந்தையிடமும் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. இந்த கிறிஸ்துமஸுக்கு நீங்கள் வருவீர்களா?. என்னிடம் இப்போது எதுவுமே இல்லை. நீங்கள் வரும் பொது டிக்‌ஷனரி, காம்பஸ் மற்றும் வாட்ச் எல்லாம் வாங்கி வாருங்கள். எனக்கு ஒரு நல்ல அப்பா வேண்டும். உங்களால் கொடுக்க முடியுமா?” என்று ஏக்கத்துடன் எழுதியுள்ளான்.  

tttn

இந்த கடிதத்தைப் பிளேக்கின் அம்மா அவனது பையிலிருந்து எடுத்துப் பார்த்து, அந்த முகாமின் பாதுகாப்பாளர்களிடமும் காட்டியுள்ளார். இதனைக் கண்ட அனைவரது உள்ளமும் உருகியது. இந்த கடிதம் பற்றி அந்த முகாம் பாதுகாப்பாளராகள் அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது இணையதளத்தில் வரல் ஆனது. அதற்குப் பலரும், ” நாங்கள் பிளேக்குக்கு உதவி செய்ய விரும்புகிறோம். அந்த முகாமில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நாங்கள் உதவ விரும்புகிறோம். இந்த கிறிஸ்துமஸ் பிளேக்குக்கு நல்ல கிறிஸ்துமஸ் ஆக அமைய வேண்டும்.” என்று கமெண்ட் செய்துள்ளனர். 

ttt

அதுமட்டுமில்லமால், அந்த முகாமில் உள்ள குழந்தைகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பல மக்கள் ஏரளமான பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். அந்த பரிசு பொருட்களை புகைப்படம் எடுத்து , முகாம் பாதுகாப்பாளர்கள்  ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.