சாக்க்ஷிக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர் என்ன ஆனது? 

 

சாக்க்ஷிக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர் என்ன ஆனது? 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் 50 -வது நாளை எட்டியுள்ளது.

சாக்க்ஷிக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர் என்ன ஆனது? 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் 50 -வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து ஏற்கனவே 6 பேர் வெளியேறியுள்ள நிலையில் ஏழாவது ஆளாகச் சாக்ஷி வெளியேற்றப்பட்டார். ஆனால் கடந்த முறை அவர் தன் கையே தனக்குத்தவி டாஸ்க்கின் சமயத்தில் 610 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். 

முதல் ஆளாக போட்டியில் வென்றதால் அவர் இந்த வாரம் நாமினேட் ஆகாத பட்சத்தில் அடுத்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்று பிக் பாஸ் ஒரு சூப்பர் பவர் அவருக்கு கொடுத்தார். இந்த நிலையில் சாக்ஷி வெளியேறியதால் அந்த பவர் யாருக்குக் கொடுக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. 

பொதுவாக இரண்டு சீசன்னிலும் இது போன்று நடைபெற்ற சமயத்தில் அவர்கள் கமல்ஹாசன் முன்பு யாருக்கு அதை கொடுக்க விரும்புகிறார்கள் என்று கேட்டு கொடுக்கப்படும். ஆனால் சாக்ஷிடம் அது கேட்காததால் அந்த பவர் அந்த போட்டியில் இரண்டாவது நபராக வந்த அபிராமிக்குக் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.