சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கே.வி.ஜெயஶ்ரீக்கு ஸ்டாலின் வாழ்த்து!

 

சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கே.வி.ஜெயஶ்ரீக்கு  ஸ்டாலின்  வாழ்த்து!

அந்த வகையில் சென்ற ஆண்டின்  தமிழில் சிறந்த நாவலாக `சூல்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை எழுதிய சோ.தர்மன் சாகித்ய அகாடமி  விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டது. 

மத்திய அரசின் சாகித்ய அகாடமி  விருது கலை இலக்கியங்களின் சிறப்பான படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டின்  தமிழில் சிறந்த நாவலாக `சூல்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை எழுதிய சோ.தர்மன் சாகித்ய அகாடமி  விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது  சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய  `நிலம் பூத்து மலர்ந்த நாள்’நாவலை மொழி பெயர்த்ததற்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. சாகித்ய அகாடமி விருதுடன்  50,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் விருது விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது  டிவிட்டர்  பக்கத்தில், ‘சிறந்த மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கே.வி.ஜெயஶ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்!  சங்ககாலக் காட்சிகளை வைத்து மனோஜ் குரூர் எழுதிய மலையாள நூலின் “நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற மொழிபெயர்ப்புக்காக இவ்விருது கிடைத்துள்ளது. அவரது மொழிபெயர்ப்புப் பணி தொடரட்டும்!’ என்று வாழ்த்தியுள்ளார்.