சவுதி அரேபியாவில் எண்ணெய் கப்பல்களின் தாக்குதல் எதிரொலி – ஈரானிற்கு டிரம்ப் கடும் கண்டனம்!!

 

சவுதி அரேபியாவில் எண்ணெய் கப்பல்களின் தாக்குதல் எதிரொலி –  ஈரானிற்கு டிரம்ப் கடும் கண்டனம்!!

ஐக்கிய அரபு நாடுகளில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானது. இதற்கு ஈரான் தான் காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் டிரம்ப்

ஐக்கிய அரபு நாடுகளில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானது. இதற்கு ஈரான் தான் காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

trump

அமெரிக்கா மற்றும் ஈரான் இரு நாடுகளுக்கும் இடையேயான சுமூகமான உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது.

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது.

oil ship

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதற்கு இந்தியா 6 மாத கால அவகாசம் கேட்டு, வருகின்ற மே மாதத்துடன் அந்த கால அவகாசமும் முடிவடைய இருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க,  தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள புஜைரா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் என மொத்தம் நான்கு சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பின்னணியில் ஈரான் தான் இருக்க முடியும் என கடுமையாக சாடியதோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கவும் தயங்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.