சவுதி அரபியாவில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிப்பு!

 

சவுதி அரபியாவில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிப்பு!

மன்னராட்சியில் புகழ்பெற்ற நாடான சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. அதே போல ஆசியாவின் ஐந்தாவது பெரிய நாடான சவுதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை மன்னராட்சியில் புகழ்பெற்ற நாடான சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனாவால் 3,287 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

ttn

சவுதியின் மன்னராக இருக்கும் சல்மான்(84) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்   பாதுகாப்பாக இருப்பதற்காக ஜெட்டா நகர் பகுதியின் அருகே இருக்கும் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் சவுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தும், கடந்த 4 நாட்களில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவித்திருக்கிறார்.