சவுதியில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. பின்னணி இதுதான்!!

சவுதியில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. பின்னணி இதுதான்!!

சவுதியில் எண்ணெய் வயலில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பிறகு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் சில இடங்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 5 மில்லியன் பீப்பாய்கள் எரிந்து நாசமாகின. மேலும் உற்பத்தியும் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளானது. 

saudi

நாளொன்றுக்கு 5.7 மில்லியன் அளவிலான பீப்பாய் உற்பத்தி செய்யும் சவுதி அரேபியா எண்ணெய் வயலில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலினாலும், உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் கச்சா எண்ணெய் சந்தையில் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. 

உலகின் கச்சா எண்ணெய் தேவையை சவுதி அரேபியா 10 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், இந்த விலை உயர்வு பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தக் கூடும் என பொருளியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பீப்பாய் ஒன்று 60.15 அமெரிக்க டாலராக விற்கப்பட்டு வந்தது. தாக்குதலுக்குப் பிறகு சுமார் 12 சதவீதம் அளவிற்கு விலை உயர்த்தப்பட்டு தற்போது பீப்பாய் ஒன்று 70.98 அமெரிக்க டாலராக விற்கப்பட்டு வருகிறது. 

crude oil

விலை உயர்வு இத்துடன் நிற்கப்போவதில்லை. கச்சா எண்ணெய் உற்பத்தி சீராகும் வரை இந்த விலை உயர்வு இருந்து கொண்டே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், 20 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கலாம் என்ற கணிப்பும் நிலவி வருகிறது.

ஏற்கனவே உலக பொருளாதார சந்தையில் அமெரிக்க மற்றும் சீனா இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மோதலால் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.