சளித் தொல்லையை விரட்டும் கற்பூரவல்லி பச்சடி

 

சளித் தொல்லையை விரட்டும் கற்பூரவல்லி பச்சடி

தேவையான பொருட்கள்
கற்பூரவல்லி இலைகள் -10
பச்சை மிளகாய் -3
தோல் நீக்கிய இஞ்சி – சிறு துண்டு
கொத்தமல்லி இழைகள் – 1/4கப்
தேங்காய் துருவல் -`1/4கப்
சீரகம் -1/2டீ ஸ்பூன்
தயிர் -1கப்

தேவையான பொருட்கள்
கற்பூரவல்லி இலைகள் -10
பச்சை மிளகாய் -3
தோல் நீக்கிய இஞ்சி – சிறு துண்டு
கொத்தமல்லி இழைகள் – 1/4கப்
தேங்காய் துருவல் -`1/4கப்
சீரகம் -1/2டீ ஸ்பூன்
தயிர் -1கப்
வறுத்த வேர்க்கடலை – 20கி
தேங்காய் எண்ணெய் – 2டேபிள் ஸ்பூன்
கடுகு -1/2டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1/2டீ ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

kalaporavali

செய்முறை
அடி கனமான வாணலியில் எண்ணெய் எதுவும் ஊற்றாமல் கற்பூரவல்லி இலைகள், பச்சை மிளகாய் இவற்றை வதக்கி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இஞ்சி,கொத்தமல்லி இலைகள், தேங்காய் துருவல் சேர்த்து ,தேவையான அளவு தயிருடன் மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, தயிரில் கலந்து வேர்க்கடலையை சேர்த்து சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து பரிமாறலாம்.
இந்த பச்சடி சளித்தொல்லை மற்றும் இருமலை கட்டுப்படுத்தும். பசியைத் தூண்டும். வாரம் ஒருமுறை சேர்த்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதில்  சேர்க்கப்படும் இஞ்சி பசியைத் தூண்டும். சளித் தொல்லையை நீக்கும். சீரகம்  உடலின் உள்ளுறுப்புகளை சீரமைக்கும். வாரம் ஒரு முறை இப்படி உணவில் சேர்த்து வந்தால் தீராத வாயுத் தொல்லையையும் நீக்கும்.