சல்மான் கான் மீது பிக் பாஸ் பிரபலம் பாலியல் புகார்!

 

சல்மான் கான் மீது பிக் பாஸ் பிரபலம் பாலியல் புகார்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது முன்னாள் பிக் பாஸ் பிரபலமான பூஜா மிஸ்ரா கொலை மற்றும் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது முன்னாள் பிக் பாஸ் பிரபலமான பூஜா மிஸ்ரா கொலை மற்றும் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து பாதிக்கப்பட்ட பலரும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர்

poojamishra

இந்த மீ டூ விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிக் பாஸ் பிரலமான பூஜா மிஸ்ரா, நடிகர் சல்மான் கான் மற்றும் சத்ருகன் சின்ஹா மீது பாலியல் பலாத்காரம்,  தனது தந்தையின் கொலைக்கு காரணம் என்றும் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by pooja misra (@poojamisraproduction) on

’சுல்தான்’ ஷூட்டிங்கின் போது சல்மான் கான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சத்ருகன் சின்ஹா தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தையை இவர்களது குடும்பத்தினர் கொலை செய்ததாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சல்மான் கான் மீதான இந்த பாலியல் மற்றும் கொலை குற்றச்சாட்டு தொடர்பாக பூஜா மிஸ்ரா போலீஸில் புகார் தெரிவித்தாரா, இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.