சல்மான்கானுக்கு டான்ஸ் கிளாஸ் நடத்திய பிரபு தேவா! வைரல் வீடியோ

 

சல்மான்கானுக்கு டான்ஸ் கிளாஸ் நடத்திய பிரபு தேவா! வைரல் வீடியோ

பிரபு தேவா, நடிகர் சல்மான்கானுக்கு  நடனம் சொல்லி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

சென்னை: பிரபு தேவா, நடிகர் சல்மான்கானுக்கு  நடனம் சொல்லி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

நடனத்தின் மூலம்  ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தவர் பிரபு தேவா. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராகத் திகழ்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவி -2 திரைப்படம் போதிய வரவேற்பு பெறாமல் தோல்வியைத் தழுவியது. 

அதைத்தொடர்ந்து இந்தியில் சல்மான் கானை வைத்து ‘டபாங் 3’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இவர் ஏற்கனவே 2008ஆம் ஆண்டு சாலமன் கானை வைத்து  போக்கிரி ரீமேக்கான ‘வான்டட்’ படத்தை இயக்கினார். அந்த படம் சல்மான்கானின் கெரியரில் முக்கியமான படமாக இருந்தது. தற்போது இவர்களது கூட்டணி மீண்டும் எட்டு வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்கு பிரபு தேவா, சல்மான்கானுக்கு ஜாலியாக நடனம் சொல்லி கொடுத்துள்ளார் . அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி  பரவி வருகிறது.