சலுகைகளை அள்ளிக் கொடுத்தும் டி.வி. விற்பனை மந்தம்…. தயாரிப்பு நிறுவனங்கள் புலம்பல்

 

சலுகைகளை அள்ளிக் கொடுத்தும் டி.வி. விற்பனை மந்தம்…. தயாரிப்பு நிறுவனங்கள் புலம்பல்

சலுகைகளை வாரி வழங்கிய போதும் டி.வி. விற்பனை மந்தமாக உள்ளதால் தயாரிப்பு நிறுவனங்கள் சோகத்தில் உள்ளன.

சமீபகாலமாக வாகனம் முதல் நுகர்பொருள் துறை நிறுவனங்கள் விற்பனையில் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், டி.வி. விற்பனையும் குறைந்து விட்டதாக டி.வி. தயாரிப்பு நிறுவனங்களும் புலம்ப தொடங்கி உள்ளன. சில மாநிலங்களில் பெய்யும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தை டி.வி. விற்பனை குறைந்தற்கு காரணமாக கூறுகின்றனர் அவர்கள். முன்னணி டி.வி. தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை 10 முதல் 20 சதவீதம் வரை சரிந்து விட்டதாக தகவல்.

டி.வி.

ஜப்பானை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பானாசோனிக் கூறுகையில், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எங்களது டி.வி. விற்பனை மதிப்பு அடிப்படையில் 20 சதவீதமும், எண்ணிக்கை அடிப்படையில் 15 சதவீதமும் குறைந்து விட்டதாக தெரிவித்தது.

டி.வி. ஷோரூம்

கடந்த ஜூலை மாதத்தில் முடிந்த உலகப்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பெரிய டி.வி.க்களுக்கான விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை என முன்னணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

குரோமா நிறுவனத்தின் தலைமை சந்தைபடுத்துதல் அதிகாரி டி.வி. விற்பனை  குறித்து கூறுகையில், தேவை பெரும்பாலும் மேம்படுத்தப்பட்ட இயல்பு உடையதாக இருந்தால், அதனை நான் உடனடியாக செய்ய முடியும் அல்லது ஒத்தி போட முடியும். மக்கள் டி.வி. வாங்குவதை ஒத்தி போட்டுள்ளனர் என கூறினார்.