சற்றுமுன்: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் திடீர் நீக்கம்

சற்றுமுன்: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் திடீர் நீக்கம்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆட மாட்டார் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உறுதி செய்துள்ளார். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடராக ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதுகின்றன.

steve smith

 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டு இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து வெற்றி பெற உதவினார் ஸ்டீவ் ஸ்மித். இறுதியாக, 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வென்றது.  

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து நடைபெற்ற இப்போட்டியின் நான்காவது நாளில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்திற்கு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பவுன்சர் ஒன்றை வீசினார். 

இந்த பந்தானது ஸ்மித்தின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நிலைகுலைந்தார். அதன்பின் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். 

சற்று சரியான பின் பேட்டிங்கை தொடர்ந்தார். 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இறுதியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது.

steve smith

3-வது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், ஆர்ச்சரின் பவுன்சர் பந்தின் பாதிப்பிலிருந்து ஸ்மித் இன்னும் மீளவில்லை. அதற்காக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

 இதை உறுதி செய்யும்விதமாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஸ்டீவ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு உதவும் விதமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகித்துள்ளார் ஸ்மித். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது பெருத்த பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.