சர்வ மங்களம் தரும் காஞ்சி காமாட்சி

 

சர்வ மங்களம் தரும் காஞ்சி காமாட்சி

கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சி, தன் அருள்பார்வையும் அகிலமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறாள். சக்தி தலங்களில் அதி உன்னதமான தலம் காஞ்சிபுரத்தின் காமாட்சி ஆலயம் பார்க்கப்படுகிறது.

கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சி, தன் அருள்பார்வையும் அகிலமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறாள். சக்தி தலங்களில் அதி உன்னதமான தலம் காஞ்சிபுரத்தின் காமாட்சி ஆலயம் பார்க்கப்படுகிறது.

temple

‘கா’ என்றால் விருப்பம் எனப் பொருள். மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்றி தருபவள். விருப்பப்பட்டு பக்தர்களை மனதை ஆட்சி செய்வதால், காமாட்சி என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஆலயத்தில், காமாட்சி ஸ்தூல வடிவமாகவும், சூட்சும வடிவமாகவும், காரண வடிவமாகவும் வீற்றிருந்து தமது கடாட்சத்தால் கோடி கோடியாக அருள்வதால் காம கோடி காமாட்சி எனும் பெயராலும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.
முன்பொரு காலத்தில் பண்டாகாசுரன் எனும் அரக்கன் பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மூவுலங்களிலும் இருக்கும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு விதமான துன்பங்களையும், தொல்லைகளையும் கொடுத்து வந்தான். 

god

அரக்கனின் தொல்லைகள் தாங்காது, தேவர்களும், முனிவர்களும் ஒன்றுகூடி சிவபெருமானிடம் முறையிட்டார். அரக்கனை அழிக்கும் ஆற்றல் பராசக்தியிடமே உள்ளது என தேவர்களையும் முனிவர்களையும் கிளி வடிவில் காம கோட்டத்தில் தவம் செய்து கொண்டிருந்த அன்னையிடம் முறையிடச் சொன்னார் ஈசன்.
சின்னஞ்சிறிய சிறுமியாக காம கோட்டத்தில் சுற்றித் திரிந்த 9 வயது சிறுமியான காமாட்சி அசுரன் பண்டகாசுரனை வதம் செய்து ஆகாயத்தில் மறைந்தாள். அரக்கனை வதம் செய்தது யாரெனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த சமயத்தில் எல்லோரையும் பரவசப்படுத்தியப்படியே வானத்தில் அசரீரி எழுந்தது. 
‘காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களையும் தூண்களாகவும், நான்கு வேதங்களையும்  சுவர்களாகவும் எழுப்பி அதற்குள் சுமங்கலிப்பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவற்றை வைத்து கதவைத் தாழிட்டாள் என்னை வெளிப்படுத்துகிறேன்’ என்கிற அசரீரியைக் கேட்டு கூடியிருந்த முனிவர்களும், தேவர்களும் அவ்வாறே செய்தனர்.
அடுத்த நாள் அனைத்தும் தயாராகி, யாரென அறியும் ஆவலில் அனைவரும் காத்திருந்தனர். அம்பிகையின் ஸ்தோத்திரங்கள் முழங்க கதவு திறக்கப்பட்டது. கதவு திறக்கப்பட்டதும் அங்கே அவர்கள் பார்த்த காட்சி அவர்களை ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

god

கோயிலின் கருவறையில் ஈஸ்வரன், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சதாசிவன் என ஐந்து பேரையும் ஆசனமாக்கி, அதன் மேல் பத்மாசன கோலத்தில் சின்னஞ் சிறு சிறுமியாய், எழில் வடிவாய், சாந்த சொரூபிணியாய், பக்தர்களை ரட்சிக்கும் லோக மாதாவாய் கைகளில் அங்குசம், பாசாங்குசத்தையும், கரும்பு வில்லையும், புஷ்ப பாணத்தையும் தனது நான்கு கரங்களில் ஏந்தி  நமக்கு ஏற்படுகிற உலக மாயையிலிருந்து விடுவிக்கிற பிரம்ம சக்தியாய் எழில் மிகு கோலத்தில் அன்னை காமாட்சி வீற்றிருந்தாள். ஆம்… காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சி சுயம்புவாய் உருவானவள். சுயம்புவாக உருவானதால், தன்னை நோக்கி வரும் பக்தர்களின் சுயத்தை காக்கிறாள். 
நம்முடைய கஷ்டங்களையும், துக்கங்களையும், மன சஞ்சலங்களையும் நீக்கி ஆத்ம சுகத்தை அருள்பவள் காமாட்சி.  
கண் குளிர காமாட்சியைத் தரிசித்து விட்டு, அங்கே தரப்படுகிற குங்கும பிரசாதத்தை கொஞ்சம் தள்ளி, கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தருகிற திருவடிகளில் வைத்த பின்பு நெற்றியில் வைத்துக் கொண்டால் வாழ்வில் சர்வ மங்களங்களும் வசமாகும்.