சர்வதேச திரைப்பட விழா: 12 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடல்!

 

சர்வதேச திரைப்பட விழா: 12 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடல்!

சர்வதேச  திரைப்பட விழா ஆண்டுதோறும் தமிழகத்தின் சிறு நகரங்களில் நடைபெறுவது வழக்கம்

சர்வதேச திரைப்பட விழா திருவண்ணாமலையில் இன்று தொடங்கி  5 நாட்கள் நடைபெறவுள்ளது.

cinema

சர்வதேச  திரைப்பட விழா ஆண்டுதோறும் தமிழகத்தின் சிறு நகரங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 6-வது ஆண்டு சர்வதேச  திரைப்பட விழா திருவண்ணாமலையில்  இன்று தொடங்கியுள்ளது. விழாவை அம்மாவட்ட ஆட்சியர்  க.சு.கந்தசாமி தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் எழுத்தாளர் தமிழ்ச் செல்வன், எழுத்தாளரும் மதுரைஎம்பியுமான  சு.வெங்கடேசன், இயக்குநர் கோபி நயினார், திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார், நடிகை ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

cinema

அவரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், 5 நாட்களும் மெக்சிகோ, அமெரிக்கா, தென் கொரியா, ஸ்பெயின், லெபனான், ஹங்கேரி உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக விருதுகளை குவித்த  ‘டூ லெட்’ (தமிழ்), ‘மாண்டோ’, ‘நியூட்டன்’ (இந்தி) ‘கும்பலங்கி நைட்ஸ்’ (மலையாளம்), ‘கோல்டு வார்’ (ஹங்கேரி), ‘சம்மர் வித் மோனிகா’ (ஸ்வீடன்) ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன. இதை தொடர்ந்து திரைப்படங்கள் சார்ந்து நடக்கவிருக்கும் கலந்துரையாடலில்  இயக்குந‌ர்கள் செழியன், பிரம்மா, லெனின் பாரதி, எடிட்டர் லெனின், பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளது  குறிப்பிடத்தக்கது.