சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தனுஷின் ‘வடசென்னை’!

 

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தனுஷின் ‘வடசென்னை’!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படம் சீனாவின் பங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

’பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை’ திரைப்படம் உருவாகியுள்ளது. மூன்று பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் இம்மாதம் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், சீனாவின் பங்யோ க்ரவுச்சிங் டைகர் ஹிட்டன் டிரேகன் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ‘வடசென்னை’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது. வரும் அக்.11 முதல் அக்.20ம் தேதி வரை இந்த திரைப்பட விருது விழா நடைபெறவுள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், டேனியல் பாலாஜி, கிஷோர், அமீர் சுல்தான், ஆண்ட்ரியா ஜெரிமியா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரம் விளையாட்டு வீரரான தனுஷ், விருப்பமில்லாமல் மாஃபியா கேங்கில் சேர்வதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ‘வடசென்னை’ திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இப்படம் வரும் அக்.17ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.