சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவராஜ் சிங் 

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவராஜ் சிங் 

இந்திய கிரிக்கெட்டில், ஆல்ரவுண்டரும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். 

2011-ம் ஆண்டு உலக கோப்பையில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மறக்க முடியாதது.  3 முறை உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியை காலிறுதியோடு வீட்டுக்கு அனுப்பியதில் யுவராஜ் சிங் பெரும் பங்கு வகித்தார்.அவரது அதிரடி ஆட்டத்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

இந்திய கிரிக்கெட்டில், ஆல்ரவுண்டரும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். 

yuraj singh

2011-ம் ஆண்டு உலக கோப்பையில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மறக்க முடியாதது.  3 முறை உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியை காலிறுதியோடு வீட்டுக்கு அனுப்பியதில் யுவராஜ் சிங் பெரும் பங்கு வகித்தார்.அவரது அதிரடி ஆட்டத்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.  கிரிக்கெட் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத போட்டியாக அந்தப் போட்டி பார்க்கப்படுகிறது. 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்தார் யுவராஜ் சிங். கடைசியாக இந்திய அணியில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் பங்கேற்றார். அதன்பின் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். ஐபிஎல் போட்டியிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார். பின்னர் அந்த அணியில் இருந்தும் கழற்றிவிடப்பட்டு இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார்.

yuraj singh

சில போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. 
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க உள்ளார். இது குறித்து பிசிசிஐ அமைப்பிடம் பேசி வருகிறார்.