சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் சைவ உணவுகள்!

 

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் சைவ உணவுகள்!

முப்பது வயதைத் தொடுவதற்குள்ளாகவே நம்மில் நிறைய பேர் இன்று ஸ்டைலாக எனக்கு சுகர் இருக்கிறது என்று சொல்லி வருகிறார்கள்.  பொதுவாக நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நமது உணவு பழக்கமும், சரியான  ஓய்வு இல்லாததும் தான். 

diabetes

வந்த பிறகு சிகிச்சைகளைத் தேடுவதை விட வருமுன் காப்பதே சிறந்தது. இருந்தாலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சில குறிப்பிட்ட சத்தான சைவ உணவுகளை உட்கொள்வதன் மூலமாக கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 
சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய சைவ வகை உணவுகளின் பட்டியலைப் பார்ப்போம்…
பருப்பு வகைகள்
முழு தானியங்கள்
கொட்டைகள் மற்றும் விதைகள்
பாகற்காய்,  சுரைக்காய், வெள்ளரி, சுண்டைக்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வெங்காயம்,

vegetables

காளான்கள். தக்காளி, ஆப்பிள்,நெல்லிக்காய், செர்ரி, பேரிக்காய், கொய்யா, புதினா, துளசி, கீரைகள்,கொத்தமல்லி 
மசாலா வகைகளில், இலவங்கப்பட்டை, மஞ்சள் முதலியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் மற்றும்  ஏலக்காய் போன்றவை நீரிழிவு பிரச்னைக்கான தீர்வாக கருதப்படுகிறது!