சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி! நீரிழிவு மருந்து விலை விரைவில் பாதியாக குறைய வாய்ப்பு

 

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி! நீரிழிவு மருந்து விலை விரைவில் பாதியாக குறைய வாய்ப்பு

நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தான vildagliptin-ன் காப்புரிமை காலம் முடிவடைந்ததால், அதன் ஜெனரிக் வெர்ஷன் மருந்தை மற்ற நிறுவனங்கள் தயாரிக்கலாம் என்பதால் அதன் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனரிக் மருந்து ஒரு நோயை குணப்படுத்தும் என்பதை கண்டுபிடிக்க மருந்து நிறுவனங்கள் பல கோடி ரூபாய் செலவிடுகின்றன. அதனால் மருந்துக்காக செலவிட்ட தொகையை தனது காப்புரிமை காலத்துக்குள் அந்நிறுவனம் வசூலித்து விட வேண்டும். காப்புரிமை முடிவடைந்த பிறகு அந்த ஜெனரிக் மருந்தை வேறு நிறுவனங்கள் தயாரித்து கொள்ளலாம். மற்ற நிறுவனங்கள் அந்த மருந்துக்கான தயாரிப்பு செலவில் கண்டுபிடிப்பிற்கான செலவை சேர்க்க முடியாது. அதனால் மருந்துகள் குறைந்த விலையில் தயாரித்து விற்பனைக்கு வரும். இதனால் நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்கும்.

நோவார்ட்டிஸ்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தான vildagliptin உலக முழுவதும் மருத்துவர்களால் அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது. vildagliptin மருந்தின் காப்புரிமை காலம் நேற்றுடன் முடிந்து விட்டது. இதனால் மற்ற மருந்து நிறுவனங்கள் அந்த ஜெனரிக் மருந்தை தாரளாமாக தயாரிக்கலாம். 

காப்புரிமை முடிவு

vildagliptin மருந்தின் காப்புரிமை காலம் எப்போது முடிவடையும் என எதிர்பார்த்து காத்திருந்த பல மருந்து நிறுவனங்கள், இனி விரைவில் அதே ஜெனரிக் மருந்தை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றே கூட vildagliptin-ன் ஜெனரிக் மருந்தை அந்நிறுவனங்கள் சந்தைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் தயாரிப்பு செலவில் கண்டுபிடிப்பு செலவை சேர்க்க முடியாது என்பதால் மருந்தின் தயாரிப்பு விலை குறைவாக இருக்கும். அதனால் நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்கும்.