சர்கார் விவகாரம்: முதல்வரை சந்திக்கும் நடிகர் விஜய்? உண்மை நிலவரம் என்ன?

 

சர்கார்  விவகாரம்: முதல்வரை சந்திக்கும் நடிகர் விஜய்? உண்மை நிலவரம் என்ன?

சர்கார் விவகாரம் குறித்த சர்ச்சைகள் அதிகமாகி வரும் நிலையில் முதல்வரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சென்னை: சர்கார் விவகாரம் குறித்த சர்ச்சைகள் அதிகமாகி வரும் நிலையில் முதல்வரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளியன்று வெளியானது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகி உள்ளன. இதில் அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதிமுக அமைச்சர்கள் பலரும் சர்கார் படம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சர்கார் படம் சர்ச்சைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.