சர்கார் படத்தில் இடம்பெற்றிருக்கும் 49P சட்டப்பிரிவு என்றால் என்ன?

 

சர்கார் படத்தில் இடம்பெற்றிருக்கும் 49P சட்டப்பிரிவு என்றால் என்ன?

சர்கார் திரைப்படத்தின் மூலம் விவாதப்பொருளாக மாறியுள்ள சட்டப்பிரிவு 49P குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

சென்னை: சர்கார் திரைப்படத்தின் மூலம் விவாதப்பொருளாக மாறியுள்ள சட்டப்பிரிவு 49P குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாப்பாத்திரத்தின் பெயர் கோமலவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் அதிமுகவிற்குள் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்கார் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, 49P சட்டப்பிரிவை பயன்படுத்தினால், கள்ள ஓட்டு பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற வலுவான ஒரு யோசனையை இத்திரைப்படம் முன் வைக்கிறது.

அந்த சட்டப்பிரிவு 49P கூறுவது இதுதான்: எந்த ஒரு நபரின் வாக்காவது வேறு ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டுவிட்டால், 49P பிரிவின்கீழ், ஒரிஜினல் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக அல்லாமல், வாக்காளர் பெயர்-சின்னம் ஆகியவற்றுடன் கூடிய காகிதத்தில், வாக்களித்துவிட்டால் அது தபால் ஓட்டு என்ற வகையில் சேர்த்துக்கொள்ளப்படும்.