சர்காருக்கு மிரட்டல் விடுத்த தமிழ் ராக்கர்ஸ்: தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி!

 

சர்காருக்கு மிரட்டல் விடுத்த தமிழ் ராக்கர்ஸ்: தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி!

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

சர்கார் படத்தை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்போவதாக தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான ட்வீட்டில், ‘சர்கார்’ படத்தின் ஹெச்டி பிரிண்ட் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைரசியை தடுக்க சன் பிக்சர்ஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘சர்கார்’ படத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய கபாலி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களை முன்கூட்டியே இணையதளங்களில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் பைரசியும், அதில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தையும் முடக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளாவில் அவ்வளவு எளிதில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பார்க்க முடியாது. ஆனால், தமிழகத்திற்கு பைரசி ஒரு சாபமாக இருப்பதாக தமிழ் திரையுலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.