சரிந்து வரும் மோட்டார் உற்பத்தியை காப்பாற்ற கூட்டணி அமைத்தது மஹேந்திரா-ஃபோர்டு நிறுவனங்கள் !

 

சரிந்து வரும் மோட்டார் உற்பத்தியை காப்பாற்ற கூட்டணி அமைத்தது மஹேந்திரா-ஃபோர்டு நிறுவனங்கள் !

மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் இணைந்து புதிய வாகன உற்பத்தி தொடங்குவதற்கான ஒப்பந்தம் செய்ய உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் இணைந்து புதிய வாகன உற்பத்தி தொடங்குவதற்கான ஒப்பந்தம் செய்ய உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளை மஹிந்திரா நிறுவனம் இனி நிர்வகிக்க தொடங்கும்.

ஃபோர்டு நிறுவனத்தின் ஏற்றுமதி பணிகளையும், புதிய கார் உற்பத்தி பணிகளையும் புதிதாக உருவாகும் மஹிந்திரா – ஃபோர்டு கூட்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, குஜராத் ஆலைகள் மஹிந்திரா – ஃபோர்டு கூட்டணி நிறுவனத்திடம் செல்ல இருக்கிறது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51%  பங்குகள் மஹிந்திராவிடமும், 49%  பங்குகள் ஃபோர்டு வசமும் இருக்கும்.

ஃபோர்டு இந்தியா நிறுவன விற்பனையை அதிகரிக்கும் திட்டங்களை மஹிந்திரா கையில் எடுத்துள்ளது. ஃபோர்டு பிராண்டில் 3 புதிய எஸ்யூவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Mahindra Car

இதில், புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவி ஒன்றும் இடம்பெறுகிறது. இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவியானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும். சில மஹிந்திரா கார்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்டு ஃபோர்டு பிராண்டில் வரும் என்று தெரிகிறது.

மேலும் எஸ்யூவி மாடல்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருப்பதால், பல்வேறு விதமான சலுகை விலையில் புதிய எஸ்யூவி கார்களை ஃபோர்டு பிராண்டில் வெளியிட மஹிந்திரா – ஃபோர்டு கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த கார்களில் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கும் புதிய எஞ்சின்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. அடுத்த ஆண்டில் புதிய மாடல்கள் சந்தைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.