‘சரவணா ஸ்டோர்ஸ்’ அண்ணாச்சிக்கு ரசிகர் மன்றம்…உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!

 

‘சரவணா ஸ்டோர்ஸ்’ அண்ணாச்சிக்கு ரசிகர் மன்றம்…உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!

மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட  பலர் நடிக்கின்றனர்.

அஜித்தின் உல்லாசம்  பட இயக்குநர்களான ஜேடி -ஜெர்ரி  இயக்கத்தில் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ அருள் சரவணன் ஹீரோவாக  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை  கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட  பலர் நடிக்கின்றனர்.

ttn

தற்காலிகமாக புரொடக்‌ஷன் நம்பர் 1 என்ற பெயரில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் ஏவிஎம் ஸ்டுடியோவில் சமீபத்தில் துவங்கியது. 100 கோடி பட்ஜெட்டில் இப்படம்  மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 

ttn

இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணனுக்கு ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைவராக தமிழ்வேந்தன் என்பவர் உள்ளார். மேலும் இந்த ரசிகர் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும், விருப்பம் உடையவர்கள் சம்பந்தப்பட்ட எண்ணை  அணுகுமாறும்  சென்னையில் ஆங்காங்கே போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

ttn

இதைக்கண்ட சிலர்  இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அம்பல பார்த்தீயா என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.