சரவணா ஸ்டார்ஸ் ஓனர் நடிக்கும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

 

சரவணா ஸ்டார்ஸ் ஓனர் நடிக்கும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கவிருக்கும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி வாயடைக்க வைத்துள்ளது. 

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கவிருக்கும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி வாயடைக்க வைத்துள்ளது. 

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரைத்  தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 5 நிமிடத்திற்கு ஒருமுறை டிவியில் தோன்றி  உள்ளூர் அழகி முதல் வெளிநாட்டு அழை வரை அனைவருடனும் இணைந்து ஆட்டம் போட்டு  பிரபலமானவர். 

arul

இதையடுத்து தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயற்சி மேற்கொண்ட நிலையில், அவர் விரைவில் ஹீரோவாக தோன்றுவார் என்ற தகவலும் நம் காதுகளுக்கு எட்டியது. 

arul

இந்நிலையில் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்  விளம்பரப் படங்கள் எடுத்த ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோர் தற்போது அருளை  ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளனர். இந்த அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இப்படத்தின் பட்ஜெட் 30 கோடி என்றும் கூறப்படுகிறது. அப்போ  இந்த படத்துல ஹீரோயின் யாரு பாஸ்…