சரண்டரானது தென்னக ரயில்வே…… இந்தி திணிப்பு அறிவிப்பு வாபஸ்!

 

சரண்டரானது தென்னக ரயில்வே…… இந்தி திணிப்பு அறிவிப்பு வாபஸ்!

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலும், மறு வழியில் ஓடிக்கொண்டிருந்த செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயிலும் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ஸ்டேஷனுக்கு அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிராக வந்துகொண்டிருந்தன.

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலும், மறு வழியில் ஓடிக்கொண்டிருந்த செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயிலும் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ஸ்டேஷனுக்கு அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிராக வந்துகொண்டிருந்தன. கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த தீப் சிங் மீனா என்ற வட இந்திய அதிகாரி இந்தியில் சொன்ன தகவலை, ஜெயக்குமார் என்ற மற்றோரு ஊழியர் தவறாக புரிந்துகொண்டதே இந்த பிரச்னைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது

railway

. இதையடுத்து, இன்று ரெயில் நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், கோட்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், பிராந்திய மொழிகளில் பேசும் போது புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

train

இந்த சுற்றறிக்கைக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தின் பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும் கடுமையாக இந்த அறிவிப்பை விமர்சித்தனர். இந்நிலையில் அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே இனியும் தொடரும் என்றும் தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.