சமையலறையாக மாறிய தூய்மை இந்தியா திட்டத்தின் கழிவறை! 

சமையலறையாக மாறிய தூய்மை இந்தியா திட்டத்தின் கழிவறை! 

உத்திரபிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிவறை ஒரு குடும்பத்தின் சமையலறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிவறை ஒரு குடும்பத்தின் சமையலறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தின் பாராபங்கி மாவட்டத்தில் உள்ளது அகன்பூர் கிராமம். இந்த கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை இல்லாததால் பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. இதனால் அக்கிராமம் முழுவதுமுள்ள வீடுகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டப்பட்டது. ஆனால் கழிவறையை பயன்படுத்ததாத ராம் பிரகாஷ் குடும்பத்தினர் அதனை சமையலறையாக மாற்றியுள்ளனர். தங்களுக்கு வீடு ஒதுக்கப்படாததால் இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையை சமையலறையாக பயன்படுத்திவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

Kitchen

இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர், பிரகாஷ் விண்ணப்பித்திருந்தால் அவருக்கு தங்குமிடம் கொடுக்கப்பட்டிருக்கும். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.