சமூக விலகலை பின்பற்றாமல் நிவாரண பொருட்கள் வழங்கியதால், அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

 

சமூக விலகலை பின்பற்றாமல் நிவாரண பொருட்கள் வழங்கியதால், அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

சமூக விலகலை பின்பற்றாமல் உணவு வழங்கியதால் அதிமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதிலிருந்து மக்களை காக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சமூக விலகலை தன்னார்வலர்கள் கடைபிடிக்காததால் உணவு வழங்க அரசு தடை விதித்தது.  அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சில கட்டுப்பாடுகளுடன் உணவு வழங்கலாம் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில்  சமூக விலகலை பின்பற்றாமல் உணவு வழங்கியதால் அதிமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ttn

கடந்த 24 ஆம் தேதி ராமநாதபுரம், ராமசாமிபட்டியில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனை அறிந்த ஊர்மக்கள், சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் திரண்டனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்ததன் பேரில், நிவாரண பொருட்களை யார் வழங்கியது என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட 4 பேர் ஏற்பாடு செய்தது தெரிய வந்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.