சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப்! தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்… 

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப்! தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்… 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள ஹாஷ்டக் #Agechallenge,இந்த ஹாஷ்டக உருவாக முக்கிய காரணம், பேஸ்ஆப் என்ற அப்ளிகேசன். கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி பயனர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனால் சிறிது அப்டேட் செய்யப்பட்டு வெளிவந்துள்ள இந்த ஆப் தற்போது இளைஞர்களை கவர்ந்துள்ளது. 

இன்னும் 10 வருடங்களுக்கு பிறகோ, அல்லது வயதான தோற்றத்திலோ நாம் எப்படி இருப்போம் என்பதை பில்டர் செய்து காட்டுகிறது இந்த பேஸ் ஆப். இளைஞர்கள், நெட்டிசன்கள் மட்டுமின்றி பிரபலங்களின் வயதான புகைப்படங்களும் இணையத்தை அதிரவைத்து வருகின்றனர். 

இந்த செயலி ரஷ்யாவை சேர்ந்த வயர்லஸ் லேப் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த ஆப் வைரலான சில நாட்களிலேயே இது குறித்து எதிர்மறையான விஷயங்களும் ட்ரெண்டாக ஆரம்பித்தது. அதாவது பேஸ் ஆப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாகவும், கேலரியிலிருக்கும் புகைப்படத்தை பயனர்களின் அனுமதியின்றி எடுத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தேசிய பாதுகாப்புக்கும், பயனர்களின் பாதுகாப்பும் இந்த செயலி மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், இந்த செயலி குறித்து FBI விசாரணை நடத்தி தடை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது.