சமூக இடைவெளி மறந்து கடைகளில் குவிந்த மக்கள்… மருத்துவர்கள் அதிர்ச்சி

 

சமூக இடைவெளி மறந்து கடைகளில் குவிந்த மக்கள்… மருத்துவர்கள் அதிர்ச்சி

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகள் மற்றும் சென்னை மாநகராட்சியை ஒட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் பொருட்களை வாங்க கடைகளில் குவிந்ததால் சமூக இடைவெளி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. 
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகள் மற்றும் சென்னை மாநகராட்சியை ஒட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நான்கு நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர். எல்லா மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றம் மக்கள் மத்தியில் உள்ளதால் யாருக்கும் சமூக இடைவெளி பற்றிய கவலையில்லை.

shops-in-lockdown

கடைகள் மாலை வரை திறந்திருக்கலாம் என்று இருந்தபோது கடைகளில் கூட்டம் இல்லை. பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என்ற அறிவிப்பால் கடைகளில் கூட்டம் கூடியது. தற்போது நான்கு நாட்களுக்கு முழு அடைப்பு என்பதால் போட்டிப்போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் சென்னை மாநகராட்சிப் பகுதியில் மட்டும் இன்று மூன்று மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் மத்தியில் பதற்றத்தைக் குறைக்க உதவவில்லை.

lockdowm-shosp

அரசின் திடீர் திடீர் முடிவுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எதற்காக ஊரடங்கு கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் முற்றிலுமாக சிதைந்துவிடுகிறது. எனவே, மக்களுக்குத் தேவையான மளிகை, காய்கறிகள் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவிட்டு எந்த ஒரு முடிவையும் அறிவிக்க வேண்டும். அல்லது  அவரவர் வீட்டு வாசலிலேயே பொருட்கள் விநியோகத்தை செய்துவிட்டு முழு ஊரடங்கை தொடரலாம் என்று கூறுகின்றனர் சுகாதார நிபுணர்கள். அதைவிடுத்து இப்படி மக்களை பீதிக்குள்ளாக்குவது கொரோனா பரவலுக்குத் துணை புரியும், இது மருத்துவர்களின் வேலைப்பளுவை அதிகரிக்கவே செய்யும் என்றும் எச்சரிக்கின்றனர்.