சமஸ்கிருதமா- தமிழா: காஞ்சியில் வெடிக்கும் சர்ச்சை…!? கண்டுகொள்ளுமா அரசு..!?

சமஸ்கிருதமா- தமிழா: காஞ்சியில் வெடிக்கும் சர்ச்சை…!? கண்டுகொள்ளுமா அரசு..!?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 17அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவின் போது வடகலை அய்யங்கார்களும் தென்கலை அய்யங்கார்களும் மோதிக்கொள்வது வழக்கமாகிவிட்டது!

varadaraja perumal kovil

வடகலையைச் சேர்ந்தவர்கள் சமஸ்கிருத ஸ்லோகங்களை,மந்திரங்களை சொல்லி வழிபடுவார்கள்.தென்கலையினரோ ஆழ்வார்,ஆண்டாள் பாசுரங்களை ,நாலாயிர திவ்விய பிரபந்தங்களை பாடுவார்கள்.
தமிழ் பாசுரங்களை பாட வடகலையினர் எதிர்புத் தெரிவிக்கிறார்கள். 

temple

முக்கியமாக திருவடிக் கோவில் முதல் வாகனமண்டபம் வரை தமிழ் பாசுரங்களை பாட வடகலையினர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.இதனால், சட்ட ஒழுங்குப் பிரட்சினை ஏற்படலாம் என்பதால்,காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா பாசுரங்களை பாட தடைவிதித்ததாகத் தெரிகிறது. 

poojai

இதைத் தொடர்ந்து,தென்கலையினருக்கு ஆதரவாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மனவாள மாமுனி சடகோப ராமானுஜ ஜீயர் ( ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை எதிர்த்து பரபரப்பு அறிக்கைகள் விட்டவர்) நேற்று கலெக்டர் பொன்னையாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.பல நூற்றாண்டு காலமாக புகைந்து கொண்டே இருக்கும் இந்த விவகாரத்தை வடகலை,தென்கலை கோவில் ஊழியர்கள் என முத்தரப்பையும் அழைத்துப் பேசி,திருவிழா அமைதியாக நடக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் வரதராஜன் முன்னாலேயே வருடந்தோறும் பக்தர்கள் மோதிக்கொள்வது தொடரும் அபாயம் இருப்பதாக சொல்கிறார்கள் காஞ்சி வட்டத்தில்.