சமஸ்கிருதத்தை நேசிக்கிறோம்… தமிழ் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட கருணாநிதி… -ஓ.பி.ஆர்-ன் பேச்சால் கொந்தளிக்கும் அ.தி.மு.க

சமஸ்கிருதத்தை நேசிக்கிறோம்… தமிழ் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட கருணாநிதி… -ஓ.பி.ஆர்-ன் பேச்சால் கொந்தளிக்கும் அ.தி.மு.க

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள் என்றும், தமிழுக்காக தி.மு.க தலைவர் கருணாநிதி உள்பட பலர் தமிழை வளர்க்க கடுமையாக பாடுபட்டார்கள் என்று ஓ.பி.ரவீந்திரநாத் பேசியது கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நாடாளுமன்றத்துக்கு அ.தி.மு.க அணியிலிருந்து வெற்றிபெற்ற ஒரே எம்.பி ஓ.பி.எஸ்-ன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத். இவர் தமிழர்கள் எதை எல்லாம் எதிர்க்கிறார்களோ, அதை எல்லாம் நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசி வருகிறார். 

opr

முத்தலாக் சட்டத்துக்கு அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தார். தன்னுடைய லெட்டர் பேடில் மோடியின் படத்தை பெரிதாக வைத்துள்ளார். இவர் அ.தி.மு.க எம்-பியா பா.ஜ.க எம்.பி-யா என்று கேட்கும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக் கழகம் கொண்டுவருவது பற்றிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர், “சமஸ்கிருதமே உலகின்  இந்தியாவின் பெரும்பான்மை மொழிகளுக்குத் தாய், நாட்டின் தொன்மையான மொழி. அது விஞ்ஞான மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இதற்கு ஆ.ராசா, தொல்.திருமாவளவன், வெங்கடேசன், சுப்பராயன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்து, ஏன் ஒரே ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் என்று கேள்வி எழுப்பினர்.  ஆனால், அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக பேசியதுடன் தி.மு.க தலைவர் கருணாநிதியை புகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய பேச்சில், “தமிழைப் போலவே சமஸ்கிருதமும் ஒரு செவ்வியல் மொழி. ஆன்மிகம், சமூகம், மருத்துவ அறிவியல், விண்வெளி ஆய்வு என பல துறைகளில் சமஸ்கிருத இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. இவை மிகப்பெரிய அறிவு பொக்கிஷமாக இருக்கிறது. சமஸ்கிருத மொழியைப் பற்றி யாரும் ஆராய்ச்சி மேற்கொள்ளாததால் அங்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆய்வுகளை மேற்கொள்ள இந்த மசோதா புதிய வழிகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்குமானதாக இந்த சமஸ்கிருத பல்கலைக் கழகம் இருக்க வேண்டும். மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை யாராக இருந்தாலும் எந்த பாகுபாடுமின்றி அனுமதிக்க வேண்டும். தமிழக மக்களாகிய நாங்கள் சமஸ்கிருதத்தை விரும்புகிறோம், தமிழை காதலிக்கிறோம்.

opr

அதேபோல், நீங்கள் சமஸ்கிருதத்தை காதலித்தாலும் தமிழை நேசியுங்கள். எங்கள் தலைவர் அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி… பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்… தமிழை வளர்க்க கடுமையாக பாடுபட்டனர். இந்த நேரத்தில் அமைச்சர் மூலமாக கோரிக்கை விடுக்கிறேன். மதுரையில் ஒரு மத்திய தமிழ் பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டும். இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்” என்றார்
சமஸ்கிருதத்தை நேசிக்கிறேன் என்றது கூட பெரியது இல்லை, தமிழின் முன்னேற்றத்துக்காக கருணாநிதி பாடுபட்டார் என்று எப்படி கூறலாம் என்று அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். ஆனாலும், ஓ.பி.எஸ் மகன் என்பதால் யாரும் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகின்றனர்.