சபரிமலை விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்துள்ள பாஜக; உண்மை நிலவரம் என்ன ?

 

சபரிமலை விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்துள்ள பாஜக; உண்மை நிலவரம் என்ன ?

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கக் கூடாது எனக் கோரி பாஜக சார்பில் கேரள மாநில தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

கேரளா: சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கக் கூடாது எனக் கோரி பாஜக சார்பில் கேரள மாநில தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து  வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இதையடுத்து பாஜக, இந்து அமைப்புகள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்,  ‘சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கக் கூடாது எனக் கோரி கேரள மாநில தலைமைச் செயலகம் முன்பு இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ‘பாஜக தனது போராட்ட இடத்தை சபரிமலையில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளதால், பக்தர்கள் இனி அச்சப்படத் தேவையில்லை’’ எனக் கூறியுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக புத்தாண்டு தினமான ஜனவரி முதல் தேதி ‘பெண்கள் சுவர்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் கேரளாவின் காசர்கோட்டில் தொடங்கி திருவனந்தபுரம் வரை மனிதச் சங்கிலி நீளும் எனவும், இதில் அனைத்துக் கட்சி பெண்களும் கலந்துகொள்ள வேண்டும்’ என்றும்  அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவேண்டுகோள் விடுத்துள்ளார்.