சபரிமலை விவகாரத்தை அரசியலாக்குபவர்களுக்கு அரசு அடி பணியாது: பினராயி விஜயன் அதிரடி

 

சபரிமலை விவகாரத்தை அரசியலாக்குபவர்களுக்கு அரசு அடி பணியாது: பினராயி விஜயன் அதிரடி

சபரிமலை விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்னைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்னைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக கூறியுள்ளார்.

ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்தது. இந்த தீர்ப்பிற்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் அறிவித்துள்ளna. ஆனால் தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பந்தளம் அரண்மனை சார்பிலும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கேரள அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கேரள அரசுக்கு எதிராக போராடி வருகின்றன..

இந்நிலையில் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது.  இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்னைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது என அதிரடியாக கூறினார்.