சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை… உச்சநீதிமன்றம் அதிரடி

 

சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை… உச்சநீதிமன்றம் அதிரடி

அரசியல் சாசன அமர்வு கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உத்தரவிட்டது.

சபரிமலை கோவிலில் பெண்கள் ஏன் தரிசனம் செய்யக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதற்கு இந்து அமைப்புகள், ஐயப்ப பக்தர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த போராட்டங்களின் போது, தரிசனம் செய்ய முயன்ற பெண்கள் தாக்கப்பட்டதால் போராட்டம் இன்னும் அதிகமானது. 

tn

இதனிடையே, சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து என்ற இரண்டு பெண்கள் சபரிமலையில் பலத்த பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர். 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்று 50க்கும் மேற்பட்ட சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாமா? கூடாதா? என்பது குறித்துக் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டது. அதன் படி, தீர்ப்பை எதிர்நோக்கி மக்கள் காத்துக் கொண்டிருக்கையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனத்தின் பெரிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 

ttn

அதன் படி, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களின் விசாரணையைத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நடத்தி வந்தது. அதில் இன்று, சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. 

ttn

அதனையடுத்து அதற்கு விளக்கம் அளித்த நீதிபதிகள், கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்ததா என்பது குறித்து மட்டுமே கேட்க உள்ளோம். அதனால், தேவை இல்லாத வாதங்களைக் கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும், சபரிமலை, இஸ்லாமியப் பெண்கள், பார்சி, தாவூதி போரா உள்ளிட்ட வழக்குகளின் வழக்கறிஞர்கள் இணைந்து சிக்கல்களுக்கான தீர்வை 3 வாரக் காலத்திற்குள் எடுக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.